தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த மாணவர்கள் - மதுரை அரிட்டாபட்டி ஓவிய கண்காட்சி

மதுரை: தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அரிட்டாபட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அக்கிராமத்தில் கண்ட காட்சிகளை அழகுமிகு ஓவியங்களாய் வரைந்து அதை பொதுமக்களின் பார்வைக்கு கண்காட்சியாக அமைத்துள்ளனர்.

அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்
அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்

By

Published : Dec 21, 2019, 8:34 PM IST

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் காஞ்சிபுரத்திலுள்ள மிடாஸ் எனும் தனியார் கட்டடக்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஒருவார காலமாக தங்கியிருந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மாணவர்கள், வாழ்வியல், வேளாண்மை, நீர்ப்பாசனம், தெருக்களின் கட்டமைப்பு, கால்நடைகள், பறவைகள், இயற்கை அமைவு, பண்பாடு, என பல்வேறு கூறுகளில் அக்கிராமத்தின் தொன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும் அவை அனைத்தையும் மிகத் தத்ரூபமாக ஓவியங்களாகவும், மாதிரியாகவும் வடிவமைப்புச் செய்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று கண்காட்சியாக அமைத்திருந்தனர். இன்றும் நாளையும் பொதுமக்களின் பார்வைக்காக இக்கண்காட்சி இலவசமாக நடைபெறுகிறது.

அரிட்டாபட்டி கிராமமே அழகு ஓவியமாய் - அசத்திய மாணவர்கள்

இது குறித்து கண்காட்சியைத் திறந்து வைத்த அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் கூறுகையில், ' கிராமமோ, நகரமோ உருவாவதற்கு நீர்நிலைகள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில் அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் நகரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்குரிய முறையான ஆய்வினை மேற்கொண்டு ஆவணப்படுத்தி மக்கள் முன்பாக இந்த மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியுள்ளனர்' என்றார்.

காப்பாட்சியர் மருதுபாண்டியன் மற்றும் மாணவி சசிரேகா பேட்டி

ஆய்வு மாணவி சசிரேகா கூறுகையில், 'அரிட்டாபட்டி கிராமத்தை எங்களது கல்விக்கான ஆய்வுக்களமாக மட்டுமே பார்க்காமல், அங்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி மையம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான முயற்சிகளை எங்களது கல்லூரியின் மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அங்கு உருவாக்கப்படவுள்ள மையம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்களே திட்டமிட்டு வடிவமைப்புச் செய்யவிருக்கிறோம்' என்றார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டுக்குப் பிறகு தமிழர்களை ஒருங்கிணைத்த சொல் கீழடி!

ABOUT THE AUTHOR

...view details