தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளர் - மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி

By

Published : Aug 9, 2021, 3:55 PM IST

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு மற்றும் மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். தமிழக அரசுத்தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது.மத்திய அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், " மத்திய அரசு கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தெரிகிறது. 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியுடையவை. மைசூரில் கல்வெட்டுக்களை ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் காவிரி பிரச்னை இருக்கும் நிலையில், தமிழகத்திலேயே கல்வெட்டுகளை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என கூறுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில், "அது அரசின் கொள்கை முடிவு" என பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள்," இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும் என குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு (ஆகஸ்ட் 10)ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க :ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை

ABOUT THE AUTHOR

...view details