தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகையில் தொல்லியல் துறை ஆய்வு - Madurai District News

மதுரை: உசிலம்பட்டி அருகே உள்ள 2300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகையை தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று (டிச.18) ஆய்வு செய்தனர்.

மதுரை
மதுரை

By

Published : Dec 18, 2020, 10:12 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளம் கீழப்பட்டி இடையே உள்ள மலைத்தொடரில் 2300 ஆண்டுகள் பழமையான சமணர் படுகைகள் உள்ளன. இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கை ஏற்று இன்று (டிச.18) தொல்லியல் உதவி இயக்குநர் முருகானந்தம் மற்றும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் 10க்கும் மேற்பட்ட சமண படுகைகள் மற்றும் தமிழி, பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தைவை என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் துறை அலுவலர்கள் ஆய்வு

இந்த ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் சமர்ப்பித்து இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிந்து சமவெளி மூதாதையர்கள் உண்ட மாட்டுக்கறி: மண்பாண்ட பொருள்களில் காணப்பட்ட ஊண் கொழுப்பு!

ABOUT THE AUTHOR

...view details