மதுரை: நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் சார்பில் அவரது வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், இன்று மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.