மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் ஒளிபரப்புக்கு தடை விதிக்கக் கோரி முறையீட்டார்.
அப்போது, பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.