உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிவரும் கரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்: வீதிதோறும் கிருமி நாசினி தெளிப்பு! - கிருமி நாசினி
மதுரை: கரோனா வைரஸை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பணியாளர்கள் வீதிதோறும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அவர்களுக்கு இணையாக தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி கரோன வைரஸை அழிக்க வீதிதோறும் மஞ்சள் கலந்த கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.
கிருமி நாசினி தெளித்த தன்னார்வலர்கள்
இந்நிலையில் வெறிச்சோடி காணப்படும் சாலைகளில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினருடன் இணைந்து சாலைகள், கடைகள், பேருந்து நிலையங்களில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு இளநீர், கிருமி நாசினி வழங்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்