உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கைகள், பல விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய சுமார் 1500 அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும், மதுரை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் கை, கால்களை சுத்தம் செய்ய சோப் ஆயில் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளையும் அகற்றி உள்ளனர்.
பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பேருந்துகளை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சுத்தம் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
இதையும் படங்க: கரோனா எதிரோலி: பேருந்துகள் மீது மருந்து தெளிக்கும் பணி தீவிரம்