தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியில் பதிலளிப்பது சட்டத்திற்கு எதிரானது - சு. வெங்கடேசன் - மதுரை

மதுரை: ஒரு மாநிலம் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

high court
high court

By

Published : Aug 19, 2021, 11:59 AM IST

Updated : Aug 19, 2021, 3:13 PM IST

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”குரூப் பி, குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு அமையங்கள் அமைக்கப்படவில்லை. இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தை அமைத்திட ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அனுப்பிய கடிதத்தில் இந்தியில் பதிலளிக்கப்பட்டிருந்தது. அவர் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை.

இவ்வாறு பதிலளித்தது சட்ட விதிமீறல். தமிழ்நாடு மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு இந்தியில் பதிலளிப்பது தொடர்கதையாகி இருக்கிறது.

இது அரசியலமைப்பு சட்ட உரிமைக்கும், அலுவல் மொழி சட்டத்திற்கும் முரணானது. எனவே தமிழ்நாடு மக்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பக்கூடாது.

ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதிமீறும் அலுவலர்கல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

மாநில மொழியில் பதிலளியுங்கள்

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி தீர்ப்பளித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், ”ஒன்றிய அரசும், அதன் அலுவலர்களும் இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் தாய்மொழியில் புரிந்துகொள்ளும்போதுதான் முழுமையடைகிறது. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில்தான் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

வெங்கடேசன் ட்வீட்

இதுகுறித்து இந்த வழக்கை தொடர்ந்த எம்.பி., சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதில் அனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு.


தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு” என பதிவிட்டுள்ளார்.

Last Updated : Aug 19, 2021, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details