மதுரை : சிவகங்கையில் உள்ள திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 7ஆம் கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அகரம் அகழாய்வில் ஆய்வுப் பணிகளுக்காக எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு குழியில் 15 அடுக்குகள் கொண்ட சுடுமண்ணால் ஆன உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. சென்ற மாதம் 15ஆம் தேதி மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வுகளில் தற்போது 15 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.