மதுரைமாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரியின் சகோதரருக்கு சொந்தமான உணவகங்கள் இயங்கி வருகின்றன. மதுரை மாநகர் செல்லூர் ஒத்தக்கடை, ஊமச்சிகுளம்,ஆத்திகுளம் கடச்சனேந்தல் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் GST வரி இன்றி ரசீதுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மன் உணவகங்களில் GST வரி செலுத்தவில்லை என அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் GST இன்றி ரசீதுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.