தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2021, 4:53 AM IST

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்துள்ள விலங்குகள் நல வாரியம்!

மதுரை : தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்துள்ள விலங்குகள் நல வாரியம்!
ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்துள்ள விலங்குகள் நல வாரியம்!

தமிழர் புத்தாண்டான தைப் பொங்கல் திருநாள் விழாவாக தமிழ்நாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அத்துடன், பொங்கல் திருநாளின் மிக முக்கிய நிகழ்வான தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தன. மூன்றாம் நாளான நாளை (ஜன.16) உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அப்போட்டிகளைக் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா குழு ஒன்றை அமைக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்துள்ள விலங்குகள் நல வாரியம்!

அக்குழுவின் நோடல் அலுவலராக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள் சாமி நியமிக்கப்பட்டுள்ளார். துணை இயக்குநர்கள் ரோஜர், சுப்பையா பாண்டியன், நடராஜகுமார், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர்கள் என்.எஸ்.மனோகரன், மகேந்திரன், ஓய்வு பெற்ற துணை இயக்குநர் பார்த்தசாரதி, விலங்குகள் நல வாரிய மருத்துவர் சுமதி, கால்நடை மருத்துவர் டி.ஆர்.தியாகராஜன் , பைரவி சி.ஷொபா, இளங்கோவன் உள்ளிட்டோர் அதன் மாண்புறு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தமிழ்நாடு தலைமை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி ஐ.பி.எஸ்., ஆகிய இருவருக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் மிருகவதை தடுப்புச்சட்டம் (திருத்தம்) 2017-இன் கூறும் விதிமுறைகளில் படி நடத்தப்பட வேண்டும். எனவே இதனை ஆய்வு செய்வதற்கும், போட்டியில் காளை மாடுகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் குழு ஒன்றை இந்திய விலங்குகள் நல வாரியம் அமைத்துள்ளது.

இந்த குழுவானது, உரிய விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும். போட்டியில் விதிமீறல்கள் நிகழ்ந்தால் அதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் இக்குழு அறிக்கை அளிக்கும். கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் தங்களது கடமையை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு கால்நடைத் துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :தாகம் தீர்த்த தந்தை பென்னிகுயிக்கிற்கு 180ஆவது பிறந்தநாள் - மரியாதை செலுத்திய ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details