மதுரை:பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிமாத வெள்ளியை முன்னிட்டு , பக்தர்களுக்கு வழங்க ஆறுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது.
அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்ந்த முருகன் என்ற 54 வயது முதியவர் எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது விழுந்தார்.
அதிக வெப்பத்துடன் கொதித்துக் கொண்டிருந்த கூழ் உடல் முழுவதும் கொட்டியதால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 70% காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் மாணவரை கைது செய்து மத்திய உளவுத்துறை விசாரணை