தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜல்லிக்கட்டு

ஜனவரி 15ஆம் நாள் நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம பொதுமக்கள் சார்பாக நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 5, 2023, 11:02 PM IST

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் தை திருநாள் அன்று அவனியாபுரத்தில் தொடங்கி பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளை நடத்த தனிநபரோ, மாவட்ட நிர்வாகமோ நடத்தக்கூடாது என அனைத்து ஜாதி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக போட்டிகள் நடைபெற வேண்டும்.

அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவனியாபுரம் கிராம பொதுமக்கள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் முடிவு - இறுதிகட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details