தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை - கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு - மதுரை மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை வழங்க கோருவது பற்றி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பின் தலைவர், பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகை
தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகை

By

Published : Oct 7, 2021, 5:41 PM IST

மதுரை: திருச்சியைச் சேர்ந்த விமல் குமார் உள்பட 7 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்சியில் உள்ள ஒரு தனியார் (பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி) பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள் பணியிலிருந்து வெளியேறினோம்.

பணியிலிருந்து விடைபெறும்போது, ஒவ்வொரு நபருக்கும் 4 முதல் 6 மாதங்கள் வரை சம்பளம் நிலுவையில் வைக்கப்பட்டது. இவ்வாறு சம்பளம் நிலுவையில் வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

தனியார் கல்லூரிப்பேராசிரியர்களுக்கு நிலுவைத்தொகை

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம், துறை சார்ந்த அலுவலர்களுக்குப் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மேலும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

எனவே, கல்லூரி நிர்வாகம், நிலுவையில் உள்ள சம்பளத்தை முழுமையாக அளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து அகில இந்திய தொழில் நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு தலைவர், பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details