தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவின் மவுனம்...? மனம்திறந்த டிடிவி தினகரன்

நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த திமுக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், 2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

By

Published : Dec 4, 2022, 8:23 PM IST

மதுரை: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணிச் செயலாளர் ரஞ்சிதம், இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகள் வருவதும், போடாத சாலைகளுக்குப் பணம் பெறப்படுவதும், திமுக என்றாலே ஊழல் என்பதைக் காட்டுகிறது.

அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற கட்சி என கூறிக் கொண்டு இந்து மதத்திற்கு எதிராக திமுக பேசி வருகிறது. திமுக அரசு தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுக-வுக்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டி தோல்வியைத் தருவார்கள்.

சசிகலா மவுனம் குறித்து டிடிவி தினகரன் பதில்

2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸிடம் இருந்த அதிகாரம், மற்றும் பணத்தை நம்பி சிலர் அவர்களுடன் இருந்தனர். அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸே காரணம். இருவரின் பிரச்னையால் தமிழ்நாட்டில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும் சசிகலா மவுனம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ’அதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை - கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details