மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், ‘அமமுக நிர்வாகி அசோகன் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்குச் செல்ல மாட்டார்கள், இலங்கை போரின் போது திமுகவின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது.