தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் ஒரு காவலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மதுரை நாகனகுளத்தைச் சேர்ந்த கார்மேகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் கைபற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி: துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தூத்துக்குடியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிகாரிகளிடமிருந்து 8 அமெரிக்க வகைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அந்த துப்பாக்கிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பாதுகாப்பாக இருப்பகாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி தற்போது அபாயகரமான பகுதியாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எட்டு துப்பாக்கிகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற சரசுதாரர் ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.