தமிழ்நாடு

tamil nadu

April Fool-ஐ மரக்கன்றுகள் வழங்கி April Cool ஆக்கிய பசுமை நண்பர்கள்!

By

Published : Apr 1, 2019, 3:28 PM IST

Updated : Apr 2, 2019, 7:31 AM IST

மதுரை: பசுமை நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவ மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கி ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக மாற்றியுள்ளனர்.

பசுமை நண்பர்கள்

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 'பசுமை நண்பர்கள்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஏப்ரல் ஃபூல் தினத்தை கூல் தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மா, பலா, கொய்யா, கொன்றை, அரசமரம், வேம்பு போன்ற மரக்கன்றுகளை பசுமை நண்பர்கள் வழங்கினர்.

இதனையடுத்து பசுமை நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் கூறியதாவது, "சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளில் மாணவ, மாணவியருக்கு அக்கறை உருவாக வேண்டும். உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதியை மாற்றி ஏப்ரல் கூல் என்னும் பசுமை தினமாக கொண்டாட முயற்சி செய்து மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடுகிறோம்.

மதுரையைச் சுற்றியுள்ள அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆகும். இந்த ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் லயா, 'சுற்றுச்சூழல் சீரழிந்து வருவதால் நல்ல காற்றையும் நல்ல குடிநீரையும் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது கேலியாக பார்த்தோம். ஆனால் இன்றைக்கு நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் ஒன்றிணைந்து இயற்கையை காக்க வேண்டும்' என்றார்.

பசுமை நண்பர்கள்
Last Updated : Apr 2, 2019, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details