தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - உசிலம்பட்டி ரயில் பாதை: சோதனை ஓட்டத்திற்கு வந்த சோதனை? - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை: மதுரை- உசிலம்பட்டி புதிய அகல ரயில் பாதையிடையே லெவல் கிராசிங் அமைத்து தர வேண்டும் என பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் ரயில்வே காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தியுள்ளனர்.

மதுரை தேனி ரயில் போக்குவரத்து  ரயில் பாதை சோதனை ஓட்டம்  மதுரை மாவட்டச் செய்திகள்
மதுரை- உசிலம்பட்டி ரயில் பாதை

By

Published : Jan 24, 2020, 4:39 PM IST

மதுரை- உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கிடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த 37 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புதிய அகல ரயில் பாதையில் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் மனோகரன், நேற்று மோட்டார் டிராலி மூலம் பாதுகாப்பு சோதனைகளைச் செய்தார்.

இன்று மாலையில் ரயில் மூலம் அதிவேக சோதனையோட்டம் நடத்தி ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறார். இவர், ரயில் பாதைக்கான பாதுகாப்புச் சான்றிதழ் அளித்த பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், முதன்மை நிர்வாக அலுவலர் ஏ.கே. சின்கா, முதன்மை சமிக்ஞை பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் இந்தச் சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய உள்ளனர்.

மதுரை- உசிலம்பட்டி ரயில் பாதை

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் ஊருக்கு செல்கிற வழியில் பாதை அல்லது லெவல் கிராசிங் அமைக்க வலியுறுத்தி அக்கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து ரயில்வே தரப்பிலிருந்து எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தால் இன்று நடைபெறும் சோதனை ஓட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே ரயில்வே காவலர்கள் பொதுமக்களுடன் மேற்கொண்ட சமாதான நடவடிக்கை காரணமாக ஆலம்பட்டி கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓபிஆருக்கு கறுப்புக் கொடி... அதிமுகவினர் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details