கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வடமாநிலங்களில் பலர் உயிரிழக்கும் அவல நிலை உண்டாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி, அனைத்து மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் அருகே செயல்பட்டு வரும் கல்யாண் என்ற 24 மணி நேர தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று வருகின்றன.