தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காகத் தமிழ்நாடு சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
குடிபெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறது. பிற மாநிலங்களில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.