தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Cockfight: வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி - வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி

Cockfight: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் நகர் பகுதியில் ஜனவரி 17ஆம் தேதி வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி
வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி

By

Published : Jan 7, 2022, 4:57 PM IST

Cockfight: உத்தமபாளையத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் நகரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்தவுள்ளோம்.

அரசு பிறப்பித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்துவிதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஜனவரி 16ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி அலுவலர்களிடம் மனு அளித்தோம். நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

எனவே, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் நகர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 16ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "சேவல் சண்டையின்போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டக்கூடாது.

சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தக் கூடாது. சண்டைக்கு விடப்படும் இரண்டு சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

மேலும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17ஆம் தேதி சேவல் சண்டை நடத்த நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க:திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு

ABOUT THE AUTHOR

...view details