மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கூலி செலவினத்தைச் சாதி வாரியாகப் பிரித்துத் தொகுக்க அனைத்து மாநில அரசுகளை ஒன்றிய அரசு கோரியுள்ளது.
ஒரே வேலை ஒரே ஊதியம்
இந்நிலையில், ஒரே வேலை ஒரே ஊதியத்திற்கு உரிமை கொண்டாடும் உழைப்பாளிகளை இவ்வாறு சாதி ரீதியாகப் பிரிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
இது நடைமுறையில் கூலி வழங்குவதைப் பாதிக்கும் எனக்கூறி கிராமப்புற உழைப்பாளி மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 200 நாள்கள் வேலை, குறைந்தபட்சம் ரூ.600 ஊதியம், கூலியை உரிய நேரத்தில் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சென்னையில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த 7 நாட்களுக்கு அனுமதியில்லை