தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்திய கணவனை கண்டித்த மனைவி, மகள் தீக்குளிப்பு! - Madurai wife daughter suicide attempt

மதுரை: மது அருந்தி வந்த கணவனை கண்டித்த மனைவி, மகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மகள் தீக்குளிப்பு!  தீக்குளிப்பு  அலங்காநல்லூர் மனைவி மகள் தீக்குளிப்பு  மதுரை மனைவி மகள் தீக்குளிப்பு  Alankanallur wife daughter suicide attempt  Madurai wife daughter suicide attempt  wife suicide attempt
Alankanallur wife daughter suicide attempt

By

Published : May 8, 2020, 8:07 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நல்லையநாயக்கர் தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவக்குமார்.

இவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

இதனால், சிவக்குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி, மகளுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், வரிசையில் நின்று மது வாங்கி அருந்தி விட்டு வீட்டில் இருந்த மனைவி பரமேஸ்வரி, மகள் அர்ச்சனாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

அதில், மனமுடைந்த மனைவி பரமேஸ்வரி, மகள் அர்ச்சனா இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு அலறினர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த அலங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு வந்த கணவனை கண்டித்து தாய், மகள் உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தங்கையை கொன்ற அண்ணன்

ABOUT THE AUTHOR

...view details