மதுரை:உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 500 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 810 காளைகள் வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இதில், 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி முதல் இடம் பிடித்தார், அவருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய பூவந்தியைச் பகுதியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆவது இடம் பெற்றார். அவருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாகத் திருச்சியைச் சேர்ந்த குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது. சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கி பாராட்டினார். இந்நிலையில் வீரர்கள் மற்றும் காளைகளுக்குப் பரிசாக வழங்கப்பட்ட கார் மற்றும் பைக்கின் சிறப்பம்சம் குறித்துப் பார்ப்போம்.
முதல் பரிசு நிஸான் கார்கள்:முதல் பரிசாக வழங்கப்பட்டுள்ள நிஸான் மேக்னைட் கார் சில வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது போல் தெரிகிறது. ஏனெனில் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காரில் பழைய நிஸான் லோகோ உள்ளது. 2020ஆம் ஆண்டு நிஸான் நிறுவனம் தங்களுடைய லோகோவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது எக்ஸ்.இ, எக்ஸ்.எல், எக்ஸ்.வி, கெஸா எடிசன், குரோ எடிசன் உள்ளிட்ட பல வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 6 லட்சத்தில் தொடங்கி 11 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:இந்த வகை கார்கள் பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட இந்த கார் 999 சிசி ஆகும். இது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. 4 முதல் 5 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 0-100 கி.மீட்டர் வேகத்தை அடைய இந்த கார் வெறும் 11.14 நெடிகளில் அடையும் என நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.அதேபோல், இந்த காருக்கு என்கேப் (NCAP) என சொல்லப்படும் நிறுவனம், இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
2வது பரிசு இருசக்கர வாகனம்கள் (Apache): மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் (TVS Apache RTR 160) வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் (Apache RTR 160) மொத்தமாக 3 வேரியண்ட் உள்ளது.
இதன் விலை, 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 27 ஆயிரம் வரை விற்பனை வேரியண்ட்டை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. TVS Apache RTR 160 ஆனது 159.7 சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 15.82 bhp மற்றும் 13.85 Nm டார்க் திறனைக் கொண்டது. 138 கிலோ எடை கொண்ட இந்த பைக், 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவைக் கொண்டது ஆகும்.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; சிறந்த வீரருக்கான கார் பரிசை வென்ற கருப்பாயூரணி கார்த்திக்!