குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள், சிறுபான்மை அமைப்பினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இன்று குடியுடிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டமாக வலுத்துவருகிறது.
காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், பெருங்குடி காவல் ஆய்வாளர் சார்மி வைஸ்லி தலைமையில் 23 காவல் துறையினர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிஏஏவை எதிர்த்து தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் - 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு