தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் காவல்துறை நடவடிக்கை' - women kolam against caa

மதுரை: பெண்கள் கோலம் போடுவது இயல்பாக இருந்தாலும் அதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும்விதத்தில் இருந்ததால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு  கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் நடவடிக்கை  மதுரை மாவட்டச் செய்திகள்  minister sellur raju  women kolam against caa  airport minister sellur raju
கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் காவல்துறை நடவடிக்கை- செல்லூர் ராஜு பேட்டி

By

Published : Dec 30, 2019, 11:38 PM IST

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலைக் காட்டிலும் இரண்டாம்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக நடந்துள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளது என்றும் மக்களின் ஆர்வத்தையும், எண்ணத்தையும் பார்க்கும்போது அதிமுக அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவித்தார்.

கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் காவல்துறை நடவடிக்கை- செல்லூர் ராஜு பேட்டி

கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் கைது குறித்த கேள்விக்கு, தேர்தல் பணியிலிருந்த காரணத்தால் செய்தியாளர்கள் கைது குறித்து செய்தி தெரியவில்லை என்றார். மேலும், வாசலில் கோலம் போடுபவர்கள் மீது வழக்குப்பதிந்தது குறித்த கேள்விக்கு, சட்டம் ஒழுங்கை காக்க கூடியதுதான் காவல் துறை.

காவல் துறைக்கென சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. விதிகளுக்குள்பட்ட போராட்டங்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் அடிப்படையில் இருப்பதனால்தான் காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்குமே தவிர மற்ற எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்றார்.

இதையும் படிங்க: கிராமங்களில் வெற்றிலை பாக்கு சுண்டலுடன் உள்ளாட்சித் தேர்தல்!

ABOUT THE AUTHOR

...view details