எம்.பி.பி.எஸ். படிப்புக்கான எண்ணிக்கை உயர்வு - அதிகாரப்பூர்வு அறிவிப்பு! - increase-of-mbbs-seat
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான எண்ணிக்கை 150 இருந்து 250 ஆக உயர்த்தி இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் வனிதா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் கீழ் இயங்கும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மத்திய அரசின் ஒதுக்கீடு 150 சீட்டுகளாக இருந்த வந்தன.
இதற்கிடையே ஐந்து ஆண்டுகளாகச் சீட்டுகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்ததற்கு போதுமான ஆய்வகங்கள், நூலகங்கள், மருத்துவர்கள், இட வசதிகள் இல்லை என இந்திய மருத்துவ கவுன்சிலின் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு 300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை மதுரை மருத்துவக் கல்லூரி வழங்கியதையடுத்து தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன. இத்தகைய சூழலில், இந்திய மருத்துவ கவுன்சில் மே 30ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான எண்ணிக்கை 150லிருந்து 250 ஆக உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது,
அதனைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை 150 லிருந்து 250 அதிகரிக்கப்பட்டுள்ளதாக என்ற தகவலை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.