மதுரை:அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மதுரை மாவட்ட அதிமுகவின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று (அக்.17) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், “குண்டுக்கே டாட்டா காட்டியவர் எம்.ஜிஆர். சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மை ஏமாற்றுக்கிறார். வாரிசுக்கு கட்சியில் இடமுண்டா என்ற கேள்விக்கு, இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்கிறார்.
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து 25 லட்சம் மக்களை தெருவில் விட்டுவிட்டார்கள். அப்போதே எம்.ஜி.ஆர்., முதியோர் பென்சன் நூறு ரூபாய் வழங்கினார். அவர் கொண்டு வந்த திட்டம், இப்போதும் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கல்யாணம் ஆகவில்லை. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே, இது நியாயமா” என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், “கொள்கை என்பது வேஷ்டி. கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு. எப்ப வேணாலும் தூக்கி போடுவோம். அண்ணா வளர்த்த கட்சியை இன்று குடும்ப கட்சியாக மாற்றி விட்டது, திமுக.