தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோழவந்தானில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - மாணிக்கம் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு - Case filed

மதுரை: சோழவந்தானில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக காணொலி ஆதாரத்துடன் திமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு செய்துள்ளனர்.

மாணிக்கம் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
மாணிக்கம் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 2, 2021, 7:02 AM IST

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு கொடுக்க திரண்டிருந்த பெண்களின் ஆரத்தி தட்டுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக காணொலி ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் திமுகவினர் புகாரளித்துள்ளனர்.

சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் போட்டியிடுகிறார்.

மாணிக்கம் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

அவர் சோழவந்தான் பேரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவரை வரவேற்க பெண்களை ஆரத்தி தட்டுடன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், சோழவந்தான் பேரூராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் ஆரத்தி தட்டுடன் வரிசையில் நின்ற பெண்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவினரின் பணப்பட்டுவாடா காட்சி குறித்த காணொலி வெளியாகியுள்ளது. இதில், ஆதாரங்களுடன் சோழவந்தான் தொகுதி திமுக தலைமைத் தேர்தல் முகவரும், வழக்கறிஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளருமான கோகுல்நாத் தேர்தல் அலுவலர் ஜெஸ்டின் ஜெயபாலிடம் புகார் கொடுத்தார். அதில், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைத் தகுதிநீக்கம் செய்திட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அப்துல் ரகுமான் சோழவந்தான் காவல் நிலையத்தில் பணப்பட்டுவாடா குறித்த காணொலியையும், புகாரையும் அளித்தார். பின்னர், சோழவந்தான் காவல் துறையினர் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மார்ச்சில் இரட்டிப்பான வாகன விற்பனை: அசத்தும் மாருதி, டோயோட்டா!

ABOUT THE AUTHOR

...view details