தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக கூட்டணியில் 6 சீட்டுகள் வரை கேட்கவுள்ளோம்' - புதிய நீதிக்கட்சி சண்முகம்

மதுரை: புதிய நீதிக் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் ஆறு சீட்டுகள் வரை கேட்க உள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

ஏ.சி சண்முகம்
ஏ.சி சண்முகம்

By

Published : Feb 25, 2021, 8:08 AM IST


புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் நேற்று (பிப். 24) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னதைப் போன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை ஆரம்பித்தாலும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட மாநிலமாகவே இருக்கிறது.

அதேபோல பல துறைகளில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது. வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவச் சீட்டு வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

17 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நிச்சயமாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும்" என்றார்.

கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "எங்கள் கட்சியின் சார்பாக ஆறு சீட்டுகள் வரை கேட்க உள்ளோம். தொகுதிப்பங்கீடு முடிந்தவுடன் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும்" என சண்முகம் பதிலளித்தார்.

இதையும் படிங்க:புதிய போக்குவரத்து பணிமனை கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details