தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி:14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு..! - All castes can become priests

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அர்ச்சகர் பயிற்சி பள்ளி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆகம ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி:14 ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் திறக்க முடிவு..!
மதுரை மீனாட்சி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி:14 ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் திறக்க முடிவு..!

By

Published : Jul 4, 2022, 8:26 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு மதுரை உட்பட தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அர்ச்சக பயிற்சி பள்ளியில் ஆகம ஆசிரியர்களை நியமிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து உரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த அர்ச்சக பயிற்சி பள்ளியில் பயின்ற பிராமணர் அல்லாத அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணி நியமனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்புப்பணியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details