விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற அதிமுக பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும் தூக்கிலிடக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையின் முன்பு இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தவிருப்பதாக வழக்குறைஞர் நந்தினி, அவரது தந்தை அறிவித்திருந்தனர்.
ஜெயஸ்ரீ கொலை வழக்கு: நியாயம் கேட்டு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினி கைது!
மதுரை: சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலைசெய்த கொடூர செயலுக்கு நியாயம் கேட்டு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை முன்பு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக டாஸ்மாக் குறித்து தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரை புதூர் ஆத்திகுளம் காந்திபுரம் அருகேயுள்ள நந்தினி வீட்டு முன்பாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து வழக்கறிஞர் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!