தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினி குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக கூறியது குறித்த கேள்விக்கு, நாங்களும்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ரஜினியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி - ராஜேந்திர பாலாஜி
மதுரை: ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லையென்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனும் அரசியல்வாதிதான் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.
ராஜேந்திர பாலஜி
மேலும், ரஜினிக்கு நடிக்கத்தான் தெரியும். அரசியல் தெரியாது. அரசியலுக்கு வந்தபின்பு கருத்து கூறலாம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எந்த அரசாங்கம் வரவேண்டும் என முடிவு செய்து ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனும் அரசியல்வாதிதான் என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின்