மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். இதையடுத்து அங்குள்ள புளியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பொது மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு வழி நெடுகிலும் பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுமக்களை வாக்களிக்குமாறு தெரிவித்து வந்த அமைச்சர், திடீரென அவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.