திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை மாவட்டம் சிலைமானில் பிரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை எம்.எல்.ஏவாக தேர்வு செய்த உடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் நல திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள். மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடத்தை ஜெயலலிதா நிறைவாக கொண்டுவந்தார்.
'மக்களின் அன்பைப் பெற்ற ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்' - support
மதுரை: மக்களின் அன்பை பெற்ற ஒரே கட்சி அதிமுகதான் என திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மழை, வெள்ள காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தவர் ஜெயலலிதா. 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்கப்படும். ஜெயலலிதாவின் அரசு எட்டு கிராம் தாலிக்கு தங்கம் வழங்கிவருகிறது. ஜெயலலிதா நம்முடன் இல்லாமல் இருந்தாலும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. சாதி, மத சண்டைகள் ஏதும் இல்லை. தேர்தல் முடிந்த உடன் நீதிமன்ற தடையை நீக்கி 2 ஆயிரம் வழங்கப்படும். 33 வருடம் ஜெயலலிதா உடன் இருந்து அவரை காப்பாற்றாத பாவிகள் தனி இயக்கமாக செயல்படுகின்றனர்.
அதிமுகவை எந்தவொரு கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் அன்பை பெற்றது அதிமுக மட்டுமே. அதிமுக தொண்டர்கள் இயக்கம், இப்படிப்பட்ட அதிமுக எப்படி காணாமல் போகும். ஜெயலலிதா வானில் இருந்து எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துகொண்டு வருகிறார். அந்த பயத்தில் நாங்கள் பணியாற்றிவருகிறோம். திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு இருந்தார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் பணியை மனசாட்சி படி செய்து வருகிறோம், நடந்து முடிந்த 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும், நடைபெற இருக்கும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்" என்றார்.