தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை - வடிவேலு பாணியில் திமுகவை நக்கலடித்த செல்லூர் ராஜூ! - அதிமுக மாநாடு

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 7:57 PM IST

செல்லூர் ராஜூ

மதுரை:அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு குறித்த நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான். இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவுக்கு கட்டம் சரியில்லை. எங்கே போனாலும் அவர்களுக்கு இடிக்கிறது. திமுக அமைச்சர்களின் தில்லு முல்லுகளை உயர்நீதிமன்ற நீதிபதி தோலுரித்து காட்டியுள்ளார். அதற்காகவே திமுக ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதற்கு மேலும் இந்த பதவி தேவையா?

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள். இப்போது என்ன செய்து விட்டார்கள்? உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்பது போல நகைக்கடன் தள்ளுபடியாகும் என நினைத்து நகைகளை அடகு வைத்த மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். மதுவால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. கிழவி கூட மது குடிக்கும் நிலையில் தமிழ்நாடு உள்ளது.

ஆளுநர் எந்த கோப்பையும் தன்னிச்சையாக முடிவெடுத்து அனுப்ப முடியாது. அதில் எழுத்து, அச்சுப் பிழைகள் இருந்திருக்கலாம். அதனால் கூட அவர் கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்கலாம். மதுரை அதிமுக மாநாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கூட கூடாத கூட்டம் ஈபிஎஸுக்கு கூடியுள்ளது. வாழ்க்கையில் இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. 108 டிகிரி வெயிலிலும் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இது தானாக சேர்ந்த கூட்டம். அதிமுகவுக்கு கிடைத்த இதயக்கனி எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என தெரிந்திருந்தும் திமுக நாடகம் ஆடுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அப்படியிருக்க அதிமுக மாநாட்டில் ஏன் தீர்மானம் போடவில்லை என கேட்க வேண்டியதில்லை. அரைத்த மாவை அரைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல” என செல்லூர் ராஜூ கூறினார்.

இதையும் படிங்க: ஊராட்சி நிதி நூதன முறையில் கையாடல் செய்த அதிகாரிகள்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

ABOUT THE AUTHOR

...view details