மதுரை: நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் "2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு என்மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தற்போது நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.