தமிழ்நாடு

tamil nadu

பேராசிரியர் கர்ண மகாராஜன் மீதான பாலியல் வழக்கு - செப்.25க்கு ஒத்திவைப்பு

By

Published : Sep 23, 2019, 7:14 PM IST

மதுரை: பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கான இடைக்கால தடையை நீடித்து, வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

professor-karna-maharajan

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றிய கர்ண மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முத்து என்ற மாணவி தன் வழிகாட்டுதலின் கீழ் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்ததாகவும், அவர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வகுப்பு மையத்திற்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் முன்கூட்டியே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடப்பட்டிருந்ததும், இதனை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்த நிலையில் அது தொடர்பாக அவரை கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தன் மீது விரோதம் கொண்ட அவர், தன் மீது பாலியல் புகார் அளித்ததாகவும், இது குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் வசந்தா மற்றும் டாக்டர் புஷ்பராஜ் ஆகியோர் சாதிய ரீதியாக தன் மீது பாகுபாடு காட்டியதாகவும், அவர்களது விசாரணை அறிக்கையில், உள் விசாரணைக் குழுவின் உறுப்பினராக இல்லாத உதவி பேராசிரியர் ராஜசபா என்பவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பான விசாரணைக்குழு முறையாக விசாரிக்காமல் தனக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்தது என்றும் தனது தரப்பு விளக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில் விளக்கம் அளிக்கக் கோரி தனக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியதாகவும், விளக்கமளிக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இந்நிலையில் தனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார் என்றும் மனுவில் பேராசிரியர் கர்ண மகாராஜன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து கடந்த செப்டெம்பர் 9ஆம் தேதி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த கட்டாய ஓய்வு உத்தரவுக்கு இடைக்கால தடையை நீடித்து, வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க...

காவல்துறையால் பெண்ணுக்கு நடந்த அவலம் -அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details