தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரஷீத் பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு! - NEET Eaxm Abuse

மதுரை: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரஷீத் பிணை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளிவைத்தது.

Adjournment of the bail application of Rashid, who was arrested in the NEET affair  நீட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரஷீத் பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு  நீட் தேர்வு விவகாரத்தில் ரஷீத் கைது  நீட் தேர்வு முறைகேடு வழக்கு  நீட் தேர்வு முறைகேடு  Rashid arrested in NEET Eaxm Case  NEET Eaxm Case  NEET Eaxm Abuse
Adjournment of the bail application of Rashid, who was arrested in the NEET affair

By

Published : Mar 29, 2021, 3:36 PM IST

கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன்.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணை வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். எனவே பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது கடந்த விசாரணையின்போது சிபிஐ தரப்பில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தெந்த மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் நிலை என்ன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீட் வழக்கு குறித்த தகவல்களையும் சேகரித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி, நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாக கண்காணிக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்து வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைத்து அடுத்தாண்டு முதல் செயல்படுத்த உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details