தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக்கு வந்தால் அடிப்பது வழக்கம் தான்.. சாத்தான் குளம் வழக்கில் தலைமை காவலர் சாட்சியம்.. - தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு வருபவர்களை அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்ததாக தலைமை காவலர் சாட்சியம் வழங்கியதையடுத்து வழக்கு18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Etv Bharatசாத்தான்குளம் வழக்கு  ஒத்திவைப்பு
Etv Bharatசாத்தான்குளம் வழக்கு ஒத்திவைப்பு

By

Published : Oct 15, 2022, 2:58 PM IST

மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று (அக்-15)மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதில் அவர் சாத்தான்குளம் போலீஸார் வழக்கமாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலவே, சாதரணமாக விசாரணைக்காக அழைத்து வந்த அனைவரையும் அடித்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை நீதிபதி முன்னர் சாட்சியமாக பதிவு செய்தார்.

அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர்களின் வழக்கறிஞர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து எதிரிகள் தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:தீபாவளி: தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் 1.12 கோடி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details