திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சில நாள்களுக்கு முன்பு தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிடப்பட்டன. சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்கி வீடியோக்களை பதிவிட எந்த கட்டணமும் தேவையில்லை என்பதால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இது திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாகவே உள்ளது. இந்து மக்களையும் அவர்களது எண்ணங்களையும் திராவிடர் கழகம் புண்படுத்தி வருகிறது. இந்து சமூகத்தை பின்பற்றுபவர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை திராவிடர் கழகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.