தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு! - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

தஞ்சாவூர்:  தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Adjournment hearing
Adjournment hearing

By

Published : Jan 7, 2020, 7:18 PM IST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரின் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

பேராசிரியர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில், '' தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் விதி மீறல் உள்ளது. மேலும் அவர் உரிய கல்வித்தகுதி இன்றி, நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின் படி அல்லாமல், விதிகளை மீறி, அவரது நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த தனி நீதிபதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்பிரமணியம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாலசுப்பிரமணியனின் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளைப் பின்பற்றியே நடைபெற்றது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு; தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து ரவீந்திரன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறையில் குவிந்துள்ள வழக்குகளைக் குறைக்க குழு!

ABOUT THE AUTHOR

...view details