மதுரை: இது தொடர்பாகஇஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, “சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் திட்டமான ஆதித்யா L1 விண்கலமானது, ஜனவரி மாத்தின் நடுவில் L1 புள்ளியை அடையும். ஆதித்யா L1 விண்கலத்தின் செயல்திறன் நன்றாக உள்ளது” என்றார்.
மேலும், இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறக்கி சாதனை படைத்தது. அதேபோல், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா L1 என்ற விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஆதித்யா L1 விண்கலம், 110 நாட்கள் பயணமாக சூரியனின் L1 பகுதிக்குச் சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பூமியில் இருந்து 1.5 லட்சம் கி.மீ தூரம் பயணித்து, சூரியனின் L1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் எனவும், L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா L1 விண்கலம், விண்வெளியில் இருக்கும் காற்றில் உள்ள துகள்கள், அயனிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது” என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்தது.