தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிகண்டன் விஷம் அருந்திய காரணத்தால் உயிரிழந்தார் - ஏடிஜிபி தாமரைக்கண்ணன் - மணிகண்டனின் உடற்கூராய்வு அறிக்கை

முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்று உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிகண்டன் விஷம் அருந்திய காரணத்தால் உயிரிழந்தார் - ஏடிஜிபி தாமரைக்கண்ணன்
மணிகண்டன் விஷம் அருந்திய காரணத்தால் உயிரிழந்தார் - ஏடிஜிபி தாமரைக்கண்ணன்

By

Published : Dec 14, 2021, 10:19 PM IST

மதுரை: காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் ஓட்டி வந்த வாகனம் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில், காவல் நிலையத்திற்கு அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பின், விசாரணை முடிந்து வீட்டிற்கு அவரது தாயுடன் அனுப்பப்பட்டார்' என்று கூறினார்.

உடற்கூராய்வு முடிவில் விஷம் அருந்தி இறந்ததாகத் தெரிகிறது:

மேலும் பேசிய அவர், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மணிகண்டனின் உடல்கூராய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளோம். உடற்கூராய்வின் முடிவில் மணிகண்டனின் உடலில் எந்தக் காயமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அவர் அருந்திய விஷத்தின் பாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மணிகண்டன் விஷம் அருந்திய காரணத்தால் உயிரிழந்தார் - ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி
மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இளைஞரின் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரியாமல் தகவல்களைப் பதிவிட வேண்டாம்' என்று தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக், தென் மண்டல காவல் துறைத் தலைவர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ரூ.53.23 லட்சம் மதிப்பில் வேளாண் துறைக்குப் புதிய கார்கள்

ABOUT THE AUTHOR

...view details