தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூலை 1 முதல் செங்கோட்டையிலிருந்து மதுரை, நெல்லைக்கு கூடுதல் ரயில்கள் - nellai

மதுரையிலிருந்து செங்கோட்டை, திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, மற்றும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

செங்கோட்டையிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு ஜூலை 1 முதல் கூடுதல் ரயில்கள்
செங்கோட்டையிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு ஜூலை 1 முதல் கூடுதல் ரயில்கள்

By

Published : Jun 25, 2022, 1:22 PM IST

"மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663). மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681). திருநெல்வேலியிலிருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட்டு மாலை 04.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மதியம் 02.55 மணிக்கு புறப்பட்டு மாலை 05.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405). திருச்செந்தூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மாலை 05.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மதுரை - ராமேஸ்வரம் இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details