நடிகர் அபி சரவணனை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அதிதி மேனன், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் ஆஜராக நடிகை அதிதி மேனனுக்கு மதுரை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சமரசத் தீர்வுக்கு அதிதி மேனனுக்கு விருப்பமில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனை நீதிபதிகள் கண்டித்ததையடுத்து, வேறு வழியின்றி கவுன்சிலிங்கிற்காக அவர் மதுரை குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.