மதுரையைச் சேர்ந்த நடிகர் அபி சரவணன் ’அட்டக்கத்தி’ போன்ற படங்களில் நடித்தவர். இவருக்கும் நடிகை அதிதி மேனனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் ஆகவில்லையா? நடிகையின் பதிலால் அதிர்ந்து போன நடிகர்
மதுரை: மனைவி அதிதி மேனனுடன் சேர்த்து வைக்கக் கோரி அபி சரவணன் தொடர்ந்த வழக்கில் தனக்கு திருமணம் ஆகவில்லை என அதிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்துவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத நடிகர் அபி சரவணன் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அதிதி மேனன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபி சரவணன் தனக்கும் அதிதி மேனனுக்கும் இடையே நடந்த திருமணத்தை ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை மே 2ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.