தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலியோ விழிப்புணர்வுக்கு தயார் - தென்னிந்திய நடிகர் சங்கம் - Polio vaccine

மதுரை: போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நடிகர் சங்கத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

போலியோ விழிப்புணர்வு

By

Published : Mar 21, 2019, 8:09 PM IST

மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. இதில் 18 வயதிற்கு கீழ் 32 கோடி இளைஞர்கள் உள்ளனர். இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்தியாவில் 1995 ல் போலியோ வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். வருடத்திற்கு 3 முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டும், இன்னும் இந்தியா போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை. வரும் காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், போலியோ குறித்த விழிப்புணர்வும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதும் தமிழகத்தில் தொடர வேண்டும் என்று கூறியது. மேலும், போலியோ குறித்த விழிப்புணர்வு பரப்புரை பிரபலங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் ஏன் செய்யக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, இவ்வழக்கில் எதிர்மனுதாரராகவும் சேர்த்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பிட்டனர். தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details