மதுரை:மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 88ஆவது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரியை ஆதரித்து கேரளாவிலிருந்து நகல் விஜய்யை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என அனைவரும் நகல் விஜய்யைக் கண்டு வியந்து பார்த்தனர் சிலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் ’மாஸ்டர்’ படம் விஜய் பாணியில் ஓடிவந்து பேருந்தில் ஏறி உள்ளே இருக்கும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்.